15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கேசவன் என்பவர் இந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி அழுதபடி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக மணப்பாறை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கேசவனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.