Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நலிவடைந்த வியாபாரிகளுக்கு… 150க்கு மேற்பட்டவர்களுக்கு… உதவி செய்த வியாபாரிகள் சங்கத்தினர்…!!

நெல்லை மாவட்டத்தில் வியாபாரிகள் சங்கம் சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நலிவடைந்த வியாபாரிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை 2ஆம் அலையை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ள நிலையில் தமிழகம் முழுவதிலும் வியாபாரிகள் கடைகளை திறக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் வியாபாரிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.

இதனையடுத்து நெல்லை மாவட்டம் பணகுடி வியாபாரிகள் சங்கம் சார்பில் நலிவடைந்த வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பணகுடி வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் வைத்து சங்கத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் 150க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |