Categories
உலக செய்திகள்

“நான் கத்தி வைத்திருக்கிறேன்!”.. பேருந்தில் வினோதமாக நடந்துகொண்ட நபர்.. புகைப்படம் வெளியீடு..!!

லண்டனில் மர்ம நபர் ஒருவர் வெவ்வேறு பேருந்துகளில் ஏறி பயணிகள் இருவரை மிரட்டி பதற வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் இருக்கும் கிரிக்கிள்வுட்டில் என்ற இடத்தில், கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதியன்று மதியம் ஒரு மணிக்கு ஒரு பேருந்து நின்றுள்ளது. அதில் ஒரு நபர் வேகமாக ஏறி, பேருந்தில் அமர்ந்திருந்த பெண்ணின் அருகில் சென்றிருக்கிறார். அதன் பின்பு திடீரென்று கத்தியிருக்கிறார்.

இதில் பதறிப்போன அந்த பெண்ணின் மீது, தான் வைத்திருந்த மது பாட்டிலை எடுத்து மதுவை  ஊற்றி விட்டு, பேருந்திலிருந்து இறங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து மற்றொரு பேருந்தில் ஏறி ஒரு பயணியிடம், “நான் கத்தி வைத்துள்ளேன், உன் செல்போனை தந்துவிடு” என்று மிரட்டியுள்ளார்.

அதன் பின்பு அங்கிருந்தும் இறங்கி சென்றுவிட்டார். இந்நிலையில் தற்போது தான் அந்த நபரின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். மேட் கேனான் என்ற காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளதாவது, எப்படியோ, இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஆனால் இதில் பாதிப்படைந்த இரண்டு பயணிகளும் அதிர்ந்துவிட்டனர். எனவே புகைப்படத்தில் உள்ள நபர் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் உடனடியாக தங்களிடம் தெரிவிக்குமாறு கூறியிருக்கிறார்.

Categories

Tech |