நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா என்பது குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள “குட்லக் சகி” எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
நாகேஷ் குத்தனூர் இயக்கத்தில் பிரபு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் விளையாட்டு, காதல், நகைச்சுவை உள்ளிட்ட பல சுவாரஸ்யமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இத்திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்துள்ளார்.
இப்படத்தின் பணிகள் மொத்தமாக முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இப்படத்தின் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் குட்லக் சகி திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
இந்நிலையில் படக்குழு இதுகுறித்து கூறியதாவது, “குட்லக் சகி திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படும் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி உண்மையல்ல. நாங்கள் கூடிய விரைவில் இப்படத்தின் ரிலீஸ் எப்படி அமையும் என்பதை வெளியிடுவோம். அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளது. இதன் மூலம் இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று பரவி வரும் செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.