கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு CBSE மற்றும் CISCE தேர்வுகள் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார்.
எனவே +2 மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்ற நிலையில் மதிப்பெண்கள் வழங்குவது, குழுவில் யாரை இறுதி செய்யலாம் என்பது குறித்தும், ஆன்லைன் வகுப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுவது தொடர்பாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகிறார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.