நாமக்கல் மாவட்டத்தில் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்ற இளைஞனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை அடுத்துள்ள மாங்குட்டைபாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் பிரேம்குமார்(22) அப்பகுதியில் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வேலை பார்க்கும் இடத்தில் வேளாளர்காலனியை சேர்ந்த 15 வயது சிறுமியும் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து பிரேம்குமார் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து சிறுமியை திருமணம் செய்வதாக கூறி அவரை கடத்தி கொண்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் சிறுமியை காணாததால் அவரது தாயார் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் மகளிர் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை செய்ததில் திருச்செங்கோடு பகுதியில் இருந்த பிரேம்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும் சிறுமியை மீட்ட போலீசார் குழந்தைகள் காப்பகத்தில் அனுப்பும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கடத்திய இளைஞர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.