தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொற்று குறையாத 11 மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இதில் ஒரு சில தளர்வுகள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வங்கிகள் மதியம் 2 மணி வரை செயல்படலாம். அரசு அலுவலகங்கள் 30% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி. மேலும் கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் டாக்ஸி, ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்கள் இ-பதிவுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.