டெல்லியில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எதற்கெல்லாம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.
இந்தியா முழுவதும் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாநிலங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருவதால், தளர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் டெல்லி மாநிலத்திலும் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் அம்மாநில முதல்வர் சில தளர்வுகளை அறிவித்துள்ளார்.
டெல்லி NCR-ல் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு இன்று முடிவுக்கு வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் ஜூன் 7ஆம் தேதி முதல் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அறிவித்துள்ளது. கடைகள் மற்றும் சந்தைகள் வார நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே திறக்கவும். கோயில்களில் ஐந்து பேரும், திருமண நிகழ்வில் 25 பேரும், இறுதி சடங்கில் 20 பேரும் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.