Categories
தேசிய செய்திகள்

பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை… முதல்வர் பதவி குறித்து எடியூரப்பா பதில்…!!

கட்சி மேலிடம் கூறினால் பதவியை ராஜினாமா செய்வேன், இல்லையெனில் ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை என எடியூரப்பா கூறியுள்ளார்.

கர்நாடகாவில் முதல்-மந்திரி எடியூரப்பா மாற்றப்பட உள்ளார் என தகவல் வெளியான நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த எடியூரப்பா மீது கட்சி நம்பிக்கை வைத்துள்ளதாகவும், கட்சித் தலைமைக்கு தாம் வேண்டியதில்லை என தோன்றினால் அன்றே எனது பதவியை நான் ராஜினாமா செய்து விடுவேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர் “இங்கே பாஜகவில் மாற்றுத் தலைமை இல்லை என கருதவில்லை. கட்சியின் உயர்மட்ட தலைமை கூறும் வரை நான் முதல்வராக இருப்பேன். அவர்கள் எப்போது சொல்கிறார்களோ அப்போது நான் பதவி விலகுவேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் எடியூரப்பாவை தொடர்ந்து துணை முதல்வர் டாக்டர் அஸ்வத் நாராயணன் மற்றும் வருவாய் துறை அதிகாரி அசோக் கூறியதாவது எடியூரப்பா பதவி விலகுவது என்ற கேள்விக்கே இடம் இல்லை. அது போன்ற விவாதங்கள் எதுவும் நடக்கவில்லை. கட்சி எடுக்கும் எந்த முடிவையும் ஏற்கத் தயாராக இருக்கிறோம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Categories

Tech |