சென்னையில் உள்ள 35 மகளிர் காவல் நிலையங்களுக்கு அம்மா ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக தமிழக காவல்துறையில் தனியாக ஒரு பிரிவாக மகளிர் காவல்நிலையங்கள் உருவாக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதல் முறையாக சென்னை புறநகர் பகுதிகளில் மொத்தம் 35 மகளிர் காவல்நிலையங்கள் உள்ளன.
இந்த 35 மகளிர் காவல் நிலையங்களுக்கும் பிரத்தியேகமான ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டு, இதற்கு அம்மா பெட்ரோல் என்றும் பெயரிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் ஒவ்வொரு வாகனம் என்று மொத்தம் 40 வாகனங்கள்கொடுக்கப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் கருவி மூலம் இந்த வாகனங்கள் கட்டுப்பாட்டு அறையுடன் இணைந்திருக்கும்.
கட்டுப்பட்டு அறைக்கு வரும் அழைப்புகள் உடனடியாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள வாகனங்களுக்கு அனுப்படும். அது மட்டுமில்லாமல் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான அவசர உதவிக்கு 1091, 1098 என்ற சேவை எண்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரோந்து வாகனங்கள் கல்லூரி, பள்ளி,ஐடி நிறுவனங்கள் என பெண்கள் அதிகம் நடமாடக் கூடிய இடங்களில் இந்த ரோந்து பணிகள் அதிகமாக மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.