Categories
மாநில செய்திகள்

உயர்கல்வியா? உயிரா? என்ற வினாவில்…. முதல்வருக்கு நூற்றுக்கு நூறு – வைரமுத்து பாராட்டு…!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு CBSE மற்றும் CISCE  தேர்வுகள் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து நேற்று முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் .

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து பிளஸ் டூ தேர்வு ரத்து செய்ததற்கு தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அதில், பிளஸ் டூ பொதுத்தேர்வு என்ற உளவியல் போரிலிருந்து மாணவ சமுதாயத்தை விடுவித்த தமிழக அரசை பாராட்டுகிறேன். உயர்கல்வியா? உயிரா? என்ற வினாவை முன்வைத்து உயிரே என்று முடிவெடுத்ததில் மாணவர்களின் பதற்றம் தணிந்தது. தேர்வு முடிவில் முதலமைச்சருக்கு நூற்றுக்கு நூறு என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |