மறைந்த சீரியல் நடிகை சித்ரா முன்னணி நடிகர் மாதவனுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சின்னத்திரைக்கு தொகுப்பாளினியாக அறிமுகமாகி அதன் பிறகு சீரியல்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த வி.ஜே.சித்ரா விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். இதை தொடர்ந்து ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்த சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இன்று வரை பலரும் சித்ராவை நினைத்து கண்கலங்கி வருகின்றனர். இந்நிலையில் நடிகை சித்ரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் மாதவனுடன் இணைந்து எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.