Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தோட்டத்தில் இருந்த கால் தடங்கள்… வனத்துறையினரின் ஏற்பாடு…. அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…!!

கரும்பு தோட்டத்திற்குள் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பெருங்களத்தூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதிக்குள் சிறுத்தை நடமாட்டம் கடந்த சில நாட்களாகவே அதிக அளவில் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்த கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி என்பவரிடமும், தாசில்தாரிடமும் சிறுத்தை ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

அவர்களின் அறிவுரையின்படி அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் கரும்பு தோட்டம் மற்றும் வயல்களில் சிறுத்தையின் கால் தடம் பதிந்துள்ளதா என்பதை ஆய்வு செய்துள்ளனர். அப்போது சிறுத்தையின் கால் தடமானது அதிக இடத்தில் காணப்பட்டதால் அதன் நடமாட்டத்தை கண்காணிக்கும் பொருட்டு நான்கு பேர் கொண்ட குழுவை வனத்துறையினர் அமைத்துள்ளனர். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாக வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |