Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்த மின்சாதனங்கள் பழுது… லாரி டிரைவருடன் வாக்குவாதம்… திருப்பூரில் பரபரப்பு…!!

மின் மாற்றியின் மீது லாரி மோதிய விபத்தில் உயர் மின்னழுத்தம் காரணமாக வீடுகளில் உள்ள மின் சாதனங்கள் பழுதடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள தென்னம்பாளையம் டி.எம்.சி காலனியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராத விதமாக அங்கிருந்த மின்மாற்றியின் மீது பலமாக மோதி விட்டது. இதனால் மின்மாற்றியில் இருந்து தீப்பொறி வந்ததுடன், உயர் மின் அழுத்தம் காரணமாக காலனி பகுதியில் இருக்கும் வீடுகளில் உள்ள வாஷிங் மிஷின், டிவி, பிரிட்ஜ் போன்ற மின் சாதனங்களில் பழுது ஏற்பட்டுள்ளது.

இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி சாலைக்கு வந்தனர். அதன்பின் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இவ்வாறு மின்மாற்றியின் மீது லாரி மோதியதால் அப்பகுதியில் இருக்கும் வீடுகளில் பயன்படுத்தப்பட்ட டிவி, பிரிட்ஜ் போன்ற 20-க்கும் மேற்பட்ட மின் சாதனங்கள் பழுதடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |