Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எதையும் மதிக்கிறதே இல்ல..! சோதனையில் சிக்கிய கடைகள்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!!

திண்டுக்கல்லில் மாநகராட்சி அதிகாரிகள் ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட இரண்டு மளிகை கடைகளுக்கு அதிரடியாக “சீல்” வைத்துள்ளனர்.

திண்டுக்கல் நகர் முழுவதும் மாநகர் நலஅலுவலர் லட்சியவர்ணா தலைமையில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திண்டுக்கல் மேற்கு ரத வீதியில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி இரண்டு மளிகை கடைகளில் வியாபாரம் நடைபெற்று கொண்டிருந்தது.

மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுமக்கள் கூட்டமாக பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அந்த இரண்டு மளிகை கடைகளையும் பூட்டி அதிரடியாக “சீல்” வைத்துள்ளனர்.

Categories

Tech |