தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், கடந்த வாரம் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.
இந்நிலையில் திருச்சியில் இன்று நடைபெற வேண்டிய தடுப்பூசி முகாம்கள் நகர் மற்றும் ஊரக பகுதிகளில் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார். தடுப்பூசிகளின் கையிருப்பு நிலையினைக் கருத்தில் கொண்டு இன்று முகாம்கள் ரத்து செய்யப்படுவதாகவும், தடுப்பூசி மருந்துகள் வந்தவுடன் முகாம்கள் மீண்டும் செயல்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.