அமெரிக்க மனநல மருத்துவர் யேல் பல்கலைக்கழகத்தில் பேசிய உரையால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
அமெரிக்க மருத்துவரான டாக்டர் அருணா என்பவர் யேல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெள்ளையர்களின் மீது தங்களுக்கு இருக்கும் மன நிலைமை குறித்து உரையாற்றினார். அந்த உரையில் அவர் வெள்ளையர்கள் எவரேனும் வந்தால் துப்பாக்கியைக் கொண்டு அவர்களுடைய தலையில் சுட்டு விடுவதுபோல் தான் கற்பனை செய்து மகிழ்ந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவ்வாறு துப்பாக்கியால் சுட்ட நபரை மண்ணில் புதைத்து விட்டு எந்தவிதமான குற்ற உணர்ச்சியுமின்றி துள்ளி குதிப்பதற்கு ஆசையாக இருக்கிறது என்றுள்ளார்.
இதனையடுத்து டாக்டர் அருணா கூறியதாவது, கருப்பினத்தவர்கள் தங்களுடைய இனத்தைப் பற்றி பேசினால், வெள்ளையர்கள் தங்களை வம்பிழுப்பதாக எண்ணுவது அவர்களின் மன நிலைமை என்றுள்ளார். இதனைத் தொடர்ந்து வெள்ளையர்கள் ஏதேனும் உதவி செய்தால் அதற்கு நன்றியை எதிர்பார்ப்பார்கள் என்றும், வெள்ளையர்கள் புத்தியின்றி நடப்பவர்கள் என்றும் அவர்களை நினைத்தாலே தன்னுடைய இரத்தம் கொதிப்பதாகவும் கூறியுள்ளார். இவருடைய இந்த உரை சர்ச்சையை கிளப்பியதால் யேல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்து தங்களுடைய ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மட்டுமே இதனை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.