உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ,இந்தியா -நியூசிலாந்து அணிகள் மோதுகின்றது .
இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் வருகின்ற 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது . இந்த போட்டியை ஒளிபரப்பு செய்யும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் முதல்முறையாக வர்ணனையாளராக அறிமுகமாகியுள்ளார்.அதோடு முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கருடன் இணைந்து ,தினேஷ் கார்த்திக் பணியாற்ற உள்ளார் .
இந்நிலையில் முதல்முறையாக வர்ணனையாளர் பணியில் அறிமுகமாகும் தினேஷ் கார்த்திக்குக்கு , சுனில் கவாஸ்கர் வாழ்த்து தெரிவித்தார் . இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , ‘ இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட் தினேஷ் கார்த்திக் அறிமுகமானபோது ,நான் இந்திய அணியின் ஆலோசகராக இருந்தேன் . இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் மூலமாக தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக அறிமுகமாக இருக்கிறார். எனவே வர்ணனையாளர் பணியை, சிறப்பாக செய்வார் என்று நம்புகிறேன் ‘ இவ்வாறு அவர் கூறியுள்ளார்