உத்திரப்பிரதேச மாநிலத்தில் தனது காதலியின் திருமணத்திற்கு பெண் வேடமிட்டு சென்ற காதலன் விக் கழண்டு விழுந்ததால் மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்திர பிரதேச மாநிலம்,படோஹி என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒரு இளைஞனை காதலித்து வந்துள்ளார் .இவர்களின் காதல் விவகாரம் காதலியின் வீட்டிற்கு தெரிய வரவே, அந்த இளம்பெண்ணின் பெற்றோர்கள் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து அந்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதனால் தனது காதலியை பிரிந்த சோகத்தில் இருந்த காதலன் திருமணத்திற்கு முன்பு எப்படியாவது காதலியை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் திருமணத்திற்கு பெண் வேடமிட்டு சென்றுள்ளார்.
இதற்காக பெண்கள் அணியும் சுடிதார், முகச் சாயம், லிப்ஸ்டிக் தலையில் விக் போன்றவற்றை வைத்துக் கொண்டு பெண் போல மாறி அந்த திருமணத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்று மணமகள் அறைக்கு செல்லும்போது அவர் தலையிலிருந்த விக் கழன்று விழுந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை அழைத்துச் சென்று கடுமையாக தாக்கி மண்டபத்தை விட்டு விரட்டி அடித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.