சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு முழு ஊரடங்கை அறிவித்து அதன்படி மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் மது விற்பனை செய்தல் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மதுபானங்கள் கடத்தி வருதல், மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல் போன்றவை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனாலும் வேலூர் மாவட்டத்திலுள்ள அணைக்கட்டு, பேரணாம்பட்டு தாலுகாவில் உள்ள மலைப்பகுதிகளில் சாராயம் காய்ச்சி பாக்கெட்டுகளில் நிரப்பி பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதனை தடுப்பதற்காக காவல்துறையினர் முக்கிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது அதிகமான காவல் துறையினர் மலைப்பகுதிகளில் வாகனங்களில் ரோந்து பணியில் செல்கின்றார்கள். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், சாராயம் காய்ப்பதற்கு பல்வேறு பொருட்களின் ஒன்றான வெல்லமும் பயன்படுத்தப்படுவதால் ஏராளமாக வெல்லம் வாங்கிய நபர்கள் குறித்து வேலூர் வெல்லமண்டி வியாபாரிகள் மற்றும் மொத்த விற்பனை வியாபாரிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது மலைப் பகுதியைச் சேர்ந்த நபர்கள் வெல்லம் வாங்கியிருப்பதாக கேட்டறிந்து அந்த பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. எனவே சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.