Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் ரோந்து சென்ற போது… பணம் வைத்து சூதாடிய… 4 பேர் கைது செய்யப்பட்டனர்…!!

ராமநாதபுரத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதி முழுவதும் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஓம்சக்திநகர் அருகே போலீசார் சென்று கொண்டிருக்கும் போது அங்குள்ள கிராம நிர்வாக கட்டிடத்தின் அருகில் 4 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து போலீசார் விசாரித்ததில் அவர்கள் வசந்தநகர் தமிழரசன்(26), சேதுபதி நகரைச் சேர்ந்த ரமேஷ்(40), நாகநாதபுரத்தை சேர்ந்த சரவணன்(42) மகேந்திரன்(32) என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் காசை வைத்து சூதாடியதும் உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |