நேற்று இயக்குனர் பிரசாந்த் நீலின் பிறந்தநாளை முன்னிட்டு கே.ஜி.எப் படக்குழுவினர் ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
கன்னட திரையுலகில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கே.ஜி.எப் படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் பிரசாந்த் நீல். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது . இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.
A man of few words but a captain who takes his team along to heights 🤩
Wishing our dearest @prashanth_neel a very Happy Birthday 🎉
A Surprise Glimpse: https://t.co/56kjSrfiSh
Can’t wait to celebrate #KGFChapter2 on the big screen.#HBDPrashanthNeel pic.twitter.com/dbJBqZhpkr
— K.G.F (@KGFTheFilm) June 4, 2021
சமீபத்தில் கே.ஜி.எப்-2 படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது இயக்குனர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸின் ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார் . இதை தொடர்ந்து இவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் 31-வது படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் நேற்று இயக்குனர் பிரசாந்த் நீலின் பிறந்தநாளை முன்னிட்டு கே.ஜி.எப் படக்குழுவினர் ஒரு ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளனர் . தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.