Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.  ஜூன் 7-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகள் உடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள காரணத்தால் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து தமிழகத்தில் மளிகை, காய்கறி, இறைச்சி, பூக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் முதல்வர் ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார். தனியாக செயல்படும் மளிகை, பலசரக்கு, காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |