தேனி மாவட்டத்தில் தேவையின்றி வெளியே சுற்றிய நபர்களை பிடித்து கொரோனா பரிசோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியிலுள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியில் கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் முகாமிட்டு கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் சுகாதாரத்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தேவையின்றி முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றி திரியும் நபர்களை பிடித்து மருத்துவ முகாம் சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தேவையின்றி வெளியே சுற்றுபவர்களை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சியில் 30 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் ஊராட்சி முழுவதிலும் கொரோனா தடுப்பு பணிகளான கிருமிநாசினி தெளித்தல், வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை மற்றும் கபசுரக் குடிநீர் வழங்குதல் போன்றவற்றை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர்.