Categories
உலக செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்…. மிகவும் வேகமாக வந்த ரயில்…. பராமரிப்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு நேர்ந்த கதி….!!

சீனாவில் ரயில் மோதிய விபத்தில் பராமரிப்பு பணியை செய்து கொண்டிருந்த ரயில்வே ஊழியர்கள் 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவிலிருக்கும் ஷிங்சாங் நகரில் ரயில்வே தண்டவாளத்தை சீரமைக்கும் பணியை சுமார் 50க்கும் மேலான ரயில்வே ஊழியர்கள் செய்து கொண்டிருப்பதால் ரயில்வே தண்டவாளத்தை சிறிது தூரத்திற்கு மூடி வைத்துள்ளனர். இதனிடையே சீனாவின் ஹாங்சவ் நகரிலிருந்து  எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று நூற்றுக்கணக்கான பயணிகளை ஏற்றிக்கொண்டு தண்டவாளத்தை சீரமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கும் நகரமான ஷிங்சாங்கை கடந்து ஹாங்சவ்விற்கு செல்வது வழக்கம். அதன்படி அந்த எக்ஸ்பிரஸ் ரயில், யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் சீரமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கும் தண்டவாளத்தில் மிகவும் வேகமாக சென்றதில் பராமரிப்புப் வேளையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரயில்வே ஊழியர்களின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பலரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், சிலர் சக்கரங்களுக்கிடையே சிக்கி நசுங்கினர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரயில்வே ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் என பலரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் 9 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பராமரிப்பு பணிகள் நடைபெறும் தண்டவாளத்தில் ரயில் எப்படி வந்தது என்ற தகவல் வெளியாகாத நிலையில், அதனை விசாரிப்பதற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சீன மக்கள் இவ்விபத்திற்கு ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Categories

Tech |