ராமேஸ்வரத்தில் கொரோனா காரணத்தால் ரத்து செய்யப்பட்ட ராமேஸ்வரம்-திருச்சி பயணிகள் ரயில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மிகவும் குறைவான ரயில்களை மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி செல்வதற்கான ரயில்கள் கடந்த சில வாரங்கள் முன்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது கடந்த 1 ஆம் தேதியிலிருந்து மீண்டும் ராமேஸ்வரம்-திருச்சி ரயில் சேவை வழக்கம்போல தொடங்கியுள்ளது.
இந்நிலையில் குறைவான பயணிகளை கொண்டு ரயில்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தினமும் அதிகாலை 5 மணி அளவில் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் விரைவு ரயில் வருகின்ற 15ஆம் தேதி வரை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் சேது எக்ஸ்பிரஸ் காலை 8.15 மணியளவில் வழக்கம்போல சென்னைக்கு இயக்கப்படுவதாக ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.