தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டத்தின் கீழ் அரிசி, பருப்பு மற்றும் பத்து முட்டைகளை வழங்க அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.