தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல்லில் சிபிஎஸ்இ தனியார் பள்ளி ஒன்று கல்வி கட்டணம் செலுத்தாத மாணவ மாணவிகளை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு முதல் பருவத்திற்கான ரூ.27,000 ஆயிரத்தை உடனே செலுத்த வேண்டும் என கூறியுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் அன்றாட வாழ்க்கையை இழந்து மக்கள் தவித்து வருகிறார்கள். அதன் காரணமாக கட்டணத்தை செலுத்த முடியாத மாணவ மாணவிகளை வகுப்பில் இருந்து நீக்கியுள்ளது.