Categories
உலக செய்திகள்

மனைவியை கொடூரமாக கொலை செய்த நபர்.. குழந்தைகள் வாக்குமூலம்.. விடுதலைக்கு முன்பு சிறையில் உயிரிழப்பு..!!

ஜிம்பாப்வேயில், மனைவியை கொலை செய்த நபர், தண்டனை காலம் முடிவடைய போகும் நிலையில் சிறையிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

ஜிம்பாப்வே நாட்டில் வசிக்கும் 50 வயது நபர் காட்பிரே முசுசா. இவர் கடந்த 2005ம் வருடத்தில் தன் மனைவியை கொடூரமாக கொலை செய்துள்ளார். அப்போது அவரின் மகள்களான சிறுமிகள் இருவரும், நீதிமன்றத்தில் எங்கள் தாயை, தந்தை கொடூரமாக குத்திக்கொலை செய்ததை பார்த்ததாக வாக்குமூலம் கொடுத்தனர்.

மேலும்,” வேண்டாம் விடுங்கள்” என்று கதறியும் அவர் நிறுத்தாமல், கூர்மையான ஆயுதத்தால் தாயின் உடல் முழுவதும் குத்தி, ரத்தம் வழிந்தது. அவர் உயிரிழந்த பின்பு தந்தை தப்பி ஓடிவிட்டார் என்று கூறினர். அதாவது காட்பிரே, தன் மனைவி அவரின் காதலனுடன் எடுத்த புகைப்படத்தை பார்த்தவுடன் ஆத்திரத்தில் கொலை செய்ததாக கூறியுள்ளார்.

இந்த வழக்கில் 15 வருடங்கள் அவருக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் சில நாட்களில் அவருக்கு விடுதலை என்ற நிலையில் சிறையிலேயே நோய் பாதிப்பால் அவர் இறந்துவிட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் ஜிம்பாப்வேக்கு அவரின் உடலை எடுத்துச் செல்ல அவரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காட்பிரேவின் உறவினர் முடுக்வா என்பவர், GoFundMe என்ற நிதி திரட்டக்கூடிய பக்கத்தில், காட்பிரே பிரிட்டன் சிறையில் கடந்த 3 ஆம் தேதியன்று உயிரிழந்துள்ளார். அவரின் உடலை சொந்த நாட்டிற்கு கொண்டு செல்வதற்காக உதவுங்கள். வரும் 12ம் தேதிக்குள் உடலை கொண்டு செல்லவுள்ளோம். இந்த உதவிக்காக இப்போதே நன்றி கூறுகிறோம். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |