ஊரடங்கின் விதிமுறையை மீறி செயல்பட்ட டீ கடையை அதிகாரி பூட்டி சீல் வைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திலுள்ள ஒத்தவாடை பகுதியில் முழு ஊரடங்கின் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் டீ கடைகளில் விற்பனை நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ள காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று தீவிர பரிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கின் விதிமுறைகளை பின்பற்றாமல் வியாபாரம் செய்துகொண்டிருந்த டீ கடையை அதிகாரிகள் மூடி ‘சீல்’ வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மாமல்லபுரத்தில் உள்ள கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள புதுகல்பாக்கம், நெம்மேலி, தேவனேரி, பட்டிபுலம், கொக்கிலமேடு மற்றும் சில இடங்களுக்கு சென்று ஊரடங்கின் விதிமுறைகளை மீறி வியாபாரம் நடக்கிறதா என்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.