மோட்டார் சைக்கிள் மீது பால் வேன் மோதிய விபத்தில் விவசாய உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வீரடிப்பட்டி கிராமத்தில் மதியழகன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மதியழகன் தனது மோட்டார் சைக்கிளில் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் வீரடிப்பட்டிக்கு திரும்பியுள்ளார். இதனை அடுத்து வீரடிப்பட்டி அருகே சென்று கொண்டிருக்கும் போது இவரது மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வந்த பால் நிறுவனத்தின் வேன் பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மதியழகன் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளித்த சிகிச்சை பலனின்றி மதியழகன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கந்தர்வகோட்டை காவல்துறையினர் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.