நாடு முழுவதும் கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு +2 பொதுதேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பல மாநிலங்களில் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தமிழகத்திலும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் நீட் தேர்வு பற்றி தற்போது எந்தவொரு பேச்சும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.