தென்காசி மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் தலைமையில் காவல்துறையினர் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடையம் மெயின் ரோட்டில் சந்தேகம்படும் படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை அழைத்து விசாரணை செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் வேலாயுதபுரம் அண்ணாநகர் காலனியை சேர்ந்த மனோஜ்(23), மணிகண்டன்(22), சதீஷ்(21) என்பது தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்திய சோதனையில் அவர்கள் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. மேலும் விசாரணையில் மந்தியூரை சேர்ந்த வினோத், சோமசுந்தரம் என்ற 2 இளைஞர்களிடம் கஞ்சா விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். இதனையறிந்த காவல்துறையினர் அவர்களையும் பிடித்து 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.