ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பதிவு முறையில் தளர்வுகள் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக பல மாவட்டங்களில் தொற்று குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
ஊரடங்கு நீட்டிக்கப் பட்டால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இப்பதிவு முறையில் தளர்வுகள் இருக்குமென்றும், வெளிநாடு மற்றும் மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ பதிவு முறை கட்டாயம் இருக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் காய்கறி, மளிகைக் கடைகள், டீக்கடைகள், ஹோட்டல்கள் போன்றவற்றை திறக்க, அரசு அலுவலகங்களில் 50 சதவீதம் பேர் பணியாற்ற, பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.