நடிகை ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்லின்’ வெப் சீரிஸின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகர் விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஓவியா. இதையடுத்து இவர் மெரினா, மதயானை கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். இதன்பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார்.
https://twitter.com/OviyaaSweetz/status/1400398580431474693
இந்த நிகழ்ச்சிக்குப் பின் ஓவியா நடிப்பில் காஞ்சனா4, 90ml உள்ளிட்ட படங்கள் வெளியானது. இந்நிலையில் நடிகை ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்லின்’ வெப் சீரிஸின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஜூன் 5-ஆம் தேதி இந்த வெப் தொடர் யூடியூப் சேனல் ஒன்றில் ரிலீசாக உள்ளது. இந்த வெப் தொடருக்காக ஓவியாவின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.