Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஜூன் 15 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை – வெளியான அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள்  விடுத்து வருகிறார். இதற்கு மத்தியில் தடுப்பூசியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜூன் 15ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு மேலும் 18.36 லட்சம் தடுப்பூசி அனுப்பி வைக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 7.24 லட்சம் தடுப்பூசி இருப்பு உள்ளதாகவும், ஜூன் 2 வரை 1 கோடிக்கும் மேல் தடுப்புசி டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |