Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் குறைந்த கொரோனா தொற்று.. முகக்கவசம் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!!

பல்வேறு நாடுகளைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தும் முகக்கவசம் கட்டாயம் அணிய தேவையில்லை என்ற அறிவிப்பை வெளியிடவுள்ளது.  

உலக சுகாதார அமைப்பு கொரோனாவை தடுப்பதற்கான முக்கிய கருவி முகக்கவசம் என்று அறிவுறுத்தியிருந்தது. எனவே உலக நாடுகள் அனைத்தும் முகக்கவசம் அணிவதை  கட்டாயப்படுத்தியது. இந்நிலையில் கடந்த ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து இஸ்ரேலில் கொரோனா தொடர்பான விதிமுறைகள் அனைத்தும் நீக்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும், தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள்  செலுத்தியவர்களும் முகக்கவசம், கட்டாயம் அணிய தேவையில்லை என்று அமெரிக்க சுகாதார துறை குறிப்பிட்டிருந்தது. இதேபோன்று ஆஸ்திரியாவிலும் ஜூன் 10 ஆம் தேதியிலிருந்து முகக்கவசம் கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சுவிட்சர்லாந்தில், நிபுணர்கள் குழு இத்திட்டத்தை கொண்டுவர தீர்மானித்துள்ளது. அதாவது பல மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை குறைந்தது, மற்றும் தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கிறது. அவ்வாறு இருக்கும் மாநிலங்களில் மட்டும் முகக்கவசம் கட்டாயமில்லை என்று அறிவிக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிட்சர்லாந்தில் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்புதான் இயல்பு நிலைக்கு திரும்புவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளது. எனவே சுவிட்சர்லாந்தில் இம்மாதம் முதல் முகக்கவசம் அணிய கட்டாயமில்லை என்ற அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |