Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி செலுத்திக்கொண்டால் பீர் இலவசம்!”.. அதிரடியாக அறிவித்த அமெரிக்கா..!!

அமெரிக்காவில் தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களுக்கு, இலவசமாக பீர் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.  

உலகிலேயே அமெரிக்கா தான், கொரோனாவால் அதிக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளில் முதலிடத்தில் இருக்கிறது. எனவே அதிபர் ஜோபைடன், கொரோனாவை  கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி வருகிறார். பைசர்/ பயோஎன்டெக், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் போன்ற தடுப்பூசிகள் அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ளது.

தற்போது வரை 29,69 ,12,892 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. இதில் 16,87,34,435 நபர்கள் முதல் டோஸ் தடுப்பூசியையும், 13,61,55,250 நபர்கள் இரண்டாம் டோஸையும் எடுத்துக் கொண்டதாக அமெரிக்க சுகாதார துறை தெரிவித்திருக்கிறது. இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 63% ஆகும்.

மேலும் அதிபர் ஜோ பைடன், வரும் ஜூலை 4 ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர தினத்துக்கு முன்பாக 70% மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியை அளிக்க வேண்டும் என்ற குறிக்கோளை நோக்கி பயணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் மதுபான தயாரிப்பு நிறுவனமான அன்ஹீசர்-புஷ்ச், தடுப்பூசி எடுத்துக் கொண்ட மக்களை ஊக்குவிக்கும் விதமாக வித்தியாசமான முறையை மேற்கொண்டிருக்கிறது.

அதாவது குறிப்பிட்ட நாளுக்குள் தடுப்பூசிக்கான இலக்கை அடைந்துவிட்டால் 21 வயதுக்கு அதிகமான நபர்களுக்கு இலவசமாக பீர் அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோன்று தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களின் குழந்தைகளை முன்னணி குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள் கவனித்துக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |