Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இரண்டு பகுதிகளில் குண்டு வெடிப்பு.. 10 பேர் உயிரிழப்பு..!!

ஆப்கானிஸ்தானில் இரண்டு பகுதிகளில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 10 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் அரச படைகளுக்கும், தலீபான் தீவிரவாதிகளுக்குமிடையில், 20 வருடங்களாக மோதல் நிலவி வருகிறது. எனவே அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள், அரசிற்கு ஆதரவளிக்கும் வகையில் ஆப்கானிஸ்தானில் களமிறங்கியது. இப்போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அமைதி பேச்சுவார்த்தையில், தலீபான்கள், அமெரிக்கா மற்றும் பிற நாட்டு படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற கோரிக்கை வைத்தனர்.

எனவே வரும் செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் அமெரிக்கா, தன் படைகள் முழுவதையும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்ற தீர்மானித்தது. இதற்கான செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளது. பல படைகள் வெளியேறியதைத்தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளார்கள்.

இந்நிலையில் அந்நாட்டின் தலைநகரான காபுலில் இருக்கும் ஷர்-இ-ஹரீஸ் என்ற பகுதியின்  சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள், நேற்று திடீரென்று வெடித்ததில் அந்த வழியாக சென்ற பேருந்து வெடித்து, 14 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் அதே பகுதியில் உள்ள மின் நிலையத்திலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில், பல பேர் காயமடைந்திருக்கிறார்கள். தற்போது வரை இந்த தாக்குதலுக்கு எவரும் பொறுப்பேற்கவில்லை. எனினும் காவல்துறையினர் தலீபான்கள் தான் இத்தாக்குதலை நடத்தியிருப்பார்கள் என்று கருதுகிறார்கள். எனவே இதுகுறித்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |