அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒலிம்பிக்கில் தேர்வு செய்யப்பட்டதையடுத்து மாவட்ட கலெக்டர் நிதிஉதவி வழங்கியுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டான் பகுதியில் காந்தி சிவகாமி என்ற கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ள மாற்று திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாடு சார்பாக வட்டெறிதல் எப்-11 போட்டியில் பங்கேற்பதற்கு காந்தி சிவகாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து வருகின்ற ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் டெல்லியில் இதற்கான சோதனை போட்டிகள் நடைபெற உள்ளன.
இதனைத்தொடர்ந்து அவரை ஊக்குவிக்கும் வகையில் டெல்லி செல்வதற்கும், அங்கே தங்குவதற்கும் ரூபாய் 50,000-ஐ அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா நிதி உதவியாக வழங்கி அவரது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். மேலும் காந்தி சிவகாமி மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று 59 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.