Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

48 மது பாக்கெட்டுகள் பறிமுதல்…. ரோந்தில் தூக்கிய காவல்துறையினர்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் மது பாக்கெட்டை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல்துறையினர் களத்தூர் பகுதியில் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த முட்புதருக்குள் வைத்து வெளிமாநில மது பாக்கெட்டுகளை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து மது பாக்கெட்டுகளை விற்பனை செய்த ராஜசேகர் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர் வைத்திருந்த 48 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |