ராணிப்பேட்டையில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பாக பொதுமக்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அரக்கோணத்தில் செல்வி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் தூங்கிக்கொண்டிருந்த செல்வியை பாம்பு கடித்தது. அதன் பின் எழுந்து பார்த்த அவர் வலியால் கத்திக் கூச்சலிட்ட நிலையில், உறவினர்கள் செல்வியை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர் இங்கு பாம்பு கடிக்கான மருந்து இல்லை என்றும், அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து செல்வியை அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர்.
ஆனால் அங்கு செல்வியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை கேட்டு ஆத்திரமடைந்த குடும்பத்தினர்களும், உறவினர்களும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் இங்கு செல்விக்கு முதலுதவி அளித்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார் என்று ஆக்ரோஷத்துடன் கூறி அங்கிருக்கும் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மருத்துவத் துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை ஈடுபட்ட பின் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.