ரோஜா சீரியலில் இருந்து நடிகை ஷாமிலி விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியல் டி.ஆர்.பி யில் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் சிப்பு சூரியன்- பிரியங்கா நல்காரி இருவரும் கதாநாயகன்- கதாநாயகியாக நடித்து வருகின்றனர். மேலும் நடிகை ஷாமிலி வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது ரோஜா சீரியல் மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த சீரியலில் இருந்து நடிகை ஷாமிலி விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தான் நடிகை ஷாமிலி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கர்ப்பமாக இருப்பதால் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க ஷாமிலி முடிவு செய்துள்ளராம். மேலும் மீண்டும் ரோஜா சீரியலில் கண்டிப்பாக நடிக்க வருவேன் என்றும் அவர் தனது ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.