பிரான்சில் அரசு செய்தி தொடர்பாளர், நாட்டில் கொரோனா விதிமுறைகளை தளர்த்துவது குறித்து எச்சரித்துள்ளார்.
பிரான்சில் கொரோனா பரவல், படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே விதிமுறைகளில் தளர்வுகள் ஏற்படுத்துவது தொடர்பில் அரசு செய்தி தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அவர் கூறியுள்ளதாவது, நாட்டின் சில மாகாணங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
எனவே விரைவாக கொரோனா விதிமுறைகளை தளர்த்துவது ஆபத்தை தரும் என்று கூறியிருக்கிறார். அருகில் இருக்கும் Pyrenees-Atlantique பகுதி மற்றும் முக்கிய நகர் Bordeaux ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு வாரமும் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். மே மாதத்தில் மூன்றாவது பொது முடக்கத்தை தளர்த்திய பிறகு கடந்த இரண்டு மாதங்களில் மருத்துவமனை மீதுள்ள அழுத்தம் குறைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.