தென்காசி திப்பணம்பட்டியில் புதிய கிராம நிர்வாக அலுவலகம் கட்டித்தர நாடாளுமன்ற உறுப்பினரிடம் மனு அளித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை அடுத்துள்ள திப்பணம்பட்டி கிராமத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்கோடி கலந்து கொண்டுள்ளார். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அவரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் திப்பனம்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் இடிந்து விழும் நிலையில் ஏற்பட்டுள்ளதால், தற்போது சில மாதங்களாக தற்காலிக கட்டிடத்தில் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அரியபுரம் மற்றும் திப்பணம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுமார் 17,000க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தேவையான வருமான சான்று, கிராம வருவாய் பராமரிப்பு, பிறப்பு இறப்பு சான்றிதழ், வரி வசூல் போன்ற வசதிகளுக்கு கிராம நிர்வாக அலுவலகம் அத்தியாவசியமாக உள்ளது. எனவே புதிய கிராம நிர்வாக அலுவலகம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.