Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஹோட்டலில் பற்றி எரிந்த நெருப்பு…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்….!!

ஹோட்டலில் மின்கசிவு காரணமாக தீ விபத்தில் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மாவட்டம் நங்கநல்லூரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது ஹோட்டலில் தீப்பிடித்து எரிந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே ரவிச்சந்திரனுக்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரவிச்சந்திரன் ஹோட்டலுக்குள் சென்று பார்த்தபோது குளிர்சாதன பெட்டிகளில் இருந்து தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்து அவ்விடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் ஹோட்டலில் இருந்த பல லட்சம்  மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. இது பற்றிய  பழவந்தாங்கல் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளும் போது  மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

Categories

Tech |