நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் மக்கள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மக்கள் வேலை இல்லாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக நெரிசலை குறைக்க சிறைக்கைதிகளை பரோலில் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பரோலில் செல்வதற்கு கைதிகள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். வெளியே சென்றால் வேலையும் கிடைக்காது. உணவும் கிடைக்காது எனக் கூறி தண்டனை காலம் முழுவதும் சிறையில் இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.