Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மகளுக்கு பாலியல் தொல்லை….. கொடூரத் தந்தை கைது…. அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு முடிவே இல்லாத சூழல் உருவாகியுள்ளது. அதனால் பெண்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை.

இந்நிலையில் பொள்ளாச்சியில் கட்டிட தொழிலாளி ஒருவர் தனது 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மனைவிக்கு இது தெரியவர கணவரை கண்டித்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவரின் தொல்லை அதிகரித்ததால் இது தொடர்பாக மனைவி மகளிர் போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் கட்டிட தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மகளை பாதுகாக்க வேண்டிய தந்தையே இப்படி ஒரு செயலை செய்தால் பெண்கள் எங்கு பாதுகாப்பு தேடி செல்வது என்ற சூழல் நாட்டில் உருவாகியுள்ளது.

Categories

Tech |