பிரபல நடிகர் மகேஷ்பாபு கிராம மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது தந்தையும் பிரபல நடிகருமான கிருஷ்ணாவுக்கு கடந்த மே ஒன்றாம் தேதி பிறந்த நாளாகும். ஆண்டுதோறும் இவரது பிறந்த நாளின் போது நடிகர் மகேஷ் பாபுவின் படங்கள் குறித்த போஸ்டர்கள் வெளியாகும்.
ஆனால் இம்முறை கொரோனாவின் அலை காரணமாக கொண்டாட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஆகையால் நடிகர் மகேஷ் பாபு தனது தந்தையின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு ஆந்திரா குண்டூர் மாவட்டத்தில் உள்ள புர்ரிபாலம் கிராம மக்கள் அனைவருக்கும் இலவசமாக தனது சொந்த செலவில் கொரோனா தடுப்பூசியை செலுத்த ஏற்பாடு செய்துள்ளார்.
அதன்படி கிராம மக்களும் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டார்கள். இதனை மகேஷ் பாபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பெருமையுடன் பதிவு செய்துள்ளார். மகேஷ்பாபுவின் இச்செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.