என்னை ஆள்மாறாட்டம் செய்ய வேண்டாம் என்று துல்கர் சல்மான் கூறியுள்ளார்.
மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் துல்கர் சல்மான். இதை தவிர இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் படங்களில் பிஸியாக நடித்து வரும் துல்கர் சல்மான் தனது பெயரில் சமூக வலைதள பக்கத்தில் நிறைய போலி கணக்குகள் இருக்கிறது என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, “எனவே, நான் கிளப்ஹவுஸில் இல்லை. இந்த கணக்குகள் என்னுடையவை அல்ல. தயவுசெய்து என்னை சமூக ஊடகங்களில் ஆள்மாறாட்டம் செய்ய வேண்டாம். குளிர்ச்சியாக இல்லை !” என்று பதிவு செய்துள்ளார்.